இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது கிறிஸ் வோக்ஸ் விளாசிய சதத்தினால் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டினை இழந்து 357 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டித் தொடர் லண்டனிலுள்ள லோர்ட்ஸ் மைதானத்தில் கடந்த 09 ஆம் திகதி ஆரம்பமானது. போட்டியில் முதல் நாள் ஆட்டத்தின் போது இடைவிடாது மழை பெய்ததனால் முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது.

இந் நிலையில் போட்டியின் இரண்டாம் நாளான நேற்றுமுன்தினம் ஆர்ம்பமானது. இதில் நாணய சுழற்சியில் வெற்றயீட்டிய இங்கிலாந்து அணி முதலில் களமிறங்குமாறு இந்திய அணியை பணித்தது. இதற்கிணங்க முதலில் களமிறங்கிய இந்திய அணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்களை எதிர்கொள்ள முடியாது 35.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்திய அணி சார்பில் அணித் தலைவர் விராட் கோலி 23 ஓட்டங்களையும், அஷ்வின் 29 ஓட்டங்களையும் ரகானே 18 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 20 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களையும் கிரிஸ் வோக்கஸ் 19 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களையும் புரோட் மற்றும் சாம் கரன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

இந் நிலையல் மூன்றாம் நாளான நேற்றைய தினம் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை எதிர்கொள்ள களமிறங்கியது அதன்படி கிறிஸ் வோக்ஸ் விளாசிய சதத்தின் துணையுடன் இங்கிலாந்து 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இங்கிலாந்து சார்பில் முதலாவது களமிறங்கிய குக் மற்றும் ஜென்னிங் ஆகியோர் இந்திய அணியின் பந்துகளை எதிர்கொண்டு 28 ஓட்டங்களை பெற்றிருந்த போது முதலாவது விக்கெட் தகர்க்கப்பட்டது. அந்த வகையில் ஜென்னிங் 11 ஓட்டங்களுடன் ஷமியின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ.முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 

அதன் பின்னர் குக் இஷாந் சர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி 77 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது மூன்றாவது விக்கெட்டினையும் பறிகொடுத்தது. இதன் பிரகாரம் பொப் 28 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இவருக்கு துணையாக ஆடி வந்த அணித் தலைவர் ரூட் 19 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸை தொடங்கியது. முதலில் ஷமியின் பந்து வீச்சில் இங்கிலாந்து வீரர்கள் திணறினர். இதனால் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 131 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுக்களை இழந்து தடுமாற ஆரம்பித்தது. இதன் பின்னர் ஜோனி பேர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஜோடி நிதானமாக 189 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. நுணுக்கமாகவும் நிதானமாகவும் ஆடி வந்த பேர்ஸ்டோவ் சதம் அடிப்பதற்கான வாய்ப்பினை தவற விட்டு 93 ஓட்டங்களுடன் பாண்டியாவின் பந்து வீச்சில் தினேஸ் கார்த்திக்கிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இறுதியாக மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி 81 ஓவர்களுக்கு முகங்கொடுத்து 6 விக்கெட்டுக்களை இழந்து 357 ஓட்டங்களை பெற்று 250 ஓட்ங்களினால் முன்னிலையில் உள்ளது. 

களத்தில் அபாரமாக ஆட்டம் காட்டி வந்த வோக்ஸ் 120 ஓட்டங்களுடனும் சாம் கரன் 22 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது இருந்தனர்.