பல கோரிக்கைகளை விடுத்தும் தீர்வு இன்னும் கிடைக்கவில்லை - அனந்தி

Published By: Vishnu

12 Aug, 2018 | 08:58 AM
image

நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை எழுத்து மூலமாகவும் நேரடியாக பேச்சுவார்த்தை மூலமாகவும் முன்வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித தீர்வும்  இன்னும் கிடைக்கவில்லை என வடமாகாண மகளிர் விவகாரம் கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

96 ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மன்னார் நகரசபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த அரசாங்கம் மக்களிடம் இருந்து எம்மை பிரித்து தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள். காரணம் போரினால் பாதிக்கப்பட்ட பெண்ணாக எனக்கு நிறைய ஆதங்கங்கள் உள்ளது.

எமது பெண்கள் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற  குழந்தைகள் முன்னாள் போராளிகள் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள்  என்று ஒட்டு மொத்த வடக்கு மாகாணமும் பல்வேறு தேவைகளை நாடி நிற்கின்றது.

நாங்கள் மத்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை எழுத்து மூலமாகவும் நேரடியாக பேச்சுவார்த்தை மூலமாகவும் முன்வைத்தோம். ஆனால் இதுவரை எந்தவித தீர்வும் இன்னும் கிடைக்கவில்லை. மாறாக அரசாங்கம் தான் நேரடியாக  அரசாங்க அதிபர்களனூடாக மத்தியில் இருந்து தாங்கள் கடமைகளை செய்வதாக சொல்லி செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் அதிகரித்த வட்டி வீதத்தில் நுண்கடன்களை பெற்றுக்கொள்பவர்கள் அவற்றை தவிர்த்து எமது மாகாண அதிகாரத்திற்கு உட்பட்டு இயங்குகின்ற கிராமிய வங்கிகள் சிக்கன கடன் வங்கிகள் போன்றவற்றை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிராமிய வங்கிகள் சிக்கன கடன் வங்கிகளை நீங்கள் நாடுகின்ற பொழுது  அது உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கும் என்றார்.

குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள 219 கூட்டுறவுசங்கங்களில் இருந்தும் உறுப்பினர்கள் கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினராக வடமாகான கூட்டுறவு ஆணையாளர் வாகீசன், மன்னார் மாவட்ட கூட்டுறவு உதவி ஆணையாளர் தலைமைக்காரியாலய கூட்டுறவு செயலாளர் ஹசானா,  மன்னார் மாவட்ட கூட்டுறவு திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் என்.பரமதாசன் மற்றும் மன்னார் மாவட்ட பதிவு செய்யப்பட்ட அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58