போராட்டம் ஒன்றை தவிர வேறு வழியில்லை - சிவகரன்

Published By: Vishnu

12 Aug, 2018 | 08:33 AM
image

அரசாங்கம் எங்களை ஸ்தம்பித நிலையில், எங்களை சலிப்படைய வைத்திருந்தால் நாங்கள் மனோ நிலையில் இருந்து மாற்றம் பெற்று மறந்து விட்டு எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாக போக வைக்கின்ற செயற்பாட்டை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக அரசாங்கம் செய்து வருவதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் அலுவலகம் மன்னாரில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 

இங்கு வேளை செய்கின்ற அமைப்புக்கள் அதீகம் திட்டம் செய்வதே தவிர போராடவில்லை. திட்டம் தயாரித்து வருகின்ற பணத்தை செலவு செய்வதற்கு வேளை செய்ததே தவிர அவர்கள் உண்மையாக போராடவில்லை. இது தான் இவர்களுக்குள் வந்த முரண்பாடு.உண்மையாக போராடி இருந்தால் எவ்வித முறண்பாடுகளும் வந்திருக்காது.

புதிய தொரு சங்கம் ஆரம்பிக்கப்பட வேண்டிய நிலைப்பாடு அல்லது இவ்விடையம் தொடர்பில் கேட்க வேண்டிய நிலைப்பாடோ ஏற்பட்டிருக்காது. நாங்கள் மக்களுக்காக எத்தனையோ விதமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றறோம்.

ஓ.எம்.பி அலுவலகம் திறப்பது தொடர்பாக முதல் முதலில் மன்னாருக்கு அவர்கள் வந்த போது 5 ஆண்டுகளுக்கு மேலாக போராடிய மன்னார் பிரஜைகள் குழு அவ்விடத்திற்கே வரவில்லை.

ஓ.எம்.பி.அலுவலகத்திற்கு எதிராக எல்லா மாவட்டங்களிலும் போராட்டங்கள் இடம் பெற்றது. குறிப்பாக வவுனியாவில் இருந்து வந்து மன்னாரில் கூட போராடினார்கள்.

ஆனால் இங்குள்ள ஒருவரைக்கூட அழைத்து போராடவில்லை. ஓ.எம்.பி அலுவலகம் எமக்கு தேவையில் என்று நாங்கள் கடுமையாக கூறி இருந்தோம்.

விடுதலை சார்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்ந்து தேடுகின்ற ஒரு நிலைப்பாட்டிற்கு உரிமை சார்ந்து உறவு சார்ந்து பணி சார்ந்து செய்யப்பட வேண்டிய இடத்திலே   அடிப்படை நேர்மை வேண்டும்.

விடுதலை என்பது வாழ்வியல் உரிமைக்காக அந்த வாழ்வியலை தக்க வைக்கக்கூடிய அரப்பணி சார்ந்த நிலைப்பாட்டிற்கு எங்களில் உண்மையும் நேர்மையும் இல்லாது விட்டால் நீண்ட காலத்திற்கு கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படும்.

ஓர் ஆண்டுகளாக ஒரு காரியமும் செய்யப்படவில்லை.இந்த நிலையில் இவர்கள் இவ்வாறான ஒரு முடிவை எடுத்ததற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.

மன்னாரை தவிர ஏனைய இடங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சுமார் ஒரு வருடங்களை கடந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் மன்னாரில் ஒன்றும் இல்லை.

மறக்கச் செய்தல் என்கின்ற அரசினதும் மேற்குலகத்தினதும் நிகழ்ச்சி நிரலுக்கு எம்மவர்களும் சேர்ந்து அதற்கு ஒத்துழைக்கின்றார்களா? என்கின்ற சந்தேகம் எமக்கு இப்போது வருகின்றது.

அதனால் இவ்வாறான சங்கம் தேவை.சில நிறுவனங்கள் திட்டம் தீட்டுகின்றார்கள். அவர்கள் போராடவில்லை. திட்டம் செய்வதும், திட்டத்தை நடை முறைப்படுத்துவதும் வரவு செலவு கணக்கு காட்டுவதுமே அவர்களது கடமையாக இருக்கின்றது.

உண்மையாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் கூடும்பங்களின் சங்கம் இதனை போராட்ட அமைப்பாக மாற்றி எப்போதும் மக்களுக்காக உண்மையாக போராடக்கூடிய கண்டு கொள்ளக்கூடிய அடிப்படையை உருவாக்க வேண்டும்.

வடக்கு கிழக்கிலே இராணுவமே வெளியேறு என்று யுத்தத்திற்கு பின்னர் முதல் முதலாக 2009 ற்கு பின்னர் போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள்.

மன்னார் மக்கள் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை.எதற்கும் பின் வாங்கியவர்களும் இல்லை. எனவே உண்மையாகவும், நேர்மையாகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டு கொள்ளக்கூடிய போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். நீங்கள் ஜெனிவாவிற்கு போய் இந்த பிரச்சினைகளை முன்வையுங்கள். அதற்கான ஏற்பாடுகளை செய்து தர முடியும்.

நாங்கள் ஓ.எம்.பி அலுவலகத்திற்கு எதிராக போராட வேண்டியவர்களாக இருக்கின்றறோம். அரசாங்கத்திற்கு இன்னும் ஒன்றரை வருடமே அயுள் காலம் இருக்கின்றது. அரசாங்கம் எங்களை ஸ்தம்பித நிலையில் வைத்திருந்தால் எங்களை சலிப்படைய வைத்திருந்தால் நாங்கள் மனோ நிலையில் இருந்து மாற்றம் பெற்று மறந்து விட்டு எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாக போக வைக்கின்ற செயற்பாட்டை திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலாக செய்து வருகின்றது. அதற்கு தமிழ் தலைமைகளும் அரசுக்கு துணை போகின்ற நிலைப்பாடும் ஏற்பாட்டுள்ளது.

எனவே நாங்களே எங்களுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.போராட்டம் ஒன்றை தவிர வாழ்வியல் இருப்பிற்கு எந்த விதத்திலும் எமக்கு நியாயம் கிடைக்கின்ற வழி ஏற்படுத்தப்படாது என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27