பதுளை, கொகோவத்தை பகுதியில் வர்த்த நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்வபத்தில் பதுளையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இரு மாடிகளை கொண்ட வர்த்தக நிலைய கட்டடம் ஒன்றிலேயே மேற்படி தீ விபத்தானது இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரும் தீயணைப்பு படையிரும் நீண்ட நேர போராட்டத்தின் பின் தீப் பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குறித்த இந்த தீவிபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.