இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுவொன்றை கையளித்தனர்.

இலங்கை கடற்படையால் எல்லை தாண்டியதாக கூறி சிறைப்பிடிக்கப்பட்ட ராமநாதபுரம் மற்றும் தஞ்சை மாவட்ட மீனவர்கள்  27 பேரையும் நான்கு நாட்டுப்படகுகளையும்  விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மீனவர்களின் உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கையென்றை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த கோரிக்கை மனுவை ஆட்சியர் சார்பாக மீன்துறை உதவி இயக்குநர் அப்துல்காதர் பெற்றுக்கொண்டு நடவடிக்கைக்கு உயர் அதிகாரிகளின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாக உறவினர்களிடம் உறுதி அளித்தார்.