சிறுவனின் கழுத்தில்  சூடு வைத்த குற்றச்சாட்டில் அச்சிறுவனின் தந்தையைஇ தலவாக்கலை பொலிஸார்  நேற்று மாலை கைதுசெய்துள்ளனர்.

தலவாக்கலை, நானுஓய தோட்டத்தைச் சேர்ந்த மதுஷான் என்ற சிறுவனே இச்சம்பவத்தில்  பாதிக்கப்பட்ட நிலையில், லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தனக்கு கட்டுப்படாமல் குழப்பம் செய்தமையால் நெருப்பில் சூடு காட்டிய கரண்டியால் சுட்டதாக சிறுவனின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனால், சிறுவனின் கழுத்துப் பகுதியில் எரிகாயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே மேற்படி நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுவனின் தந்தையை இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

(க.கிஷாந்தன்)