கருணாநிதியின் மறைவின் காரணமாக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்காக திமுகவின் பொதுக்குழுவின் கூட்டம் எதிர்வரும் 14 ம் திகதி சென்னையில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில் அழகிரி கட்சியில் முக்கிய பதவியை கோருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்சியின் ஒரு பிரிவினர் இதற்கு ஆதரவாக உள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அதிமுகவில்  ஏற்பட்ட பிளவு போன்று திமுகவிலும் ஏற்படக்கூடாது என திமுக தலைவர்களும் கருணாநிதியின் குடும்பத்தினரும் விரும்புகின்றனர்.

அதனால் அவரை மீண்டும் கொண்டுவரவேண்டும் முக்கிய பதவியை கொடுக்கவேண்டும் என அவர்கள்  விரும்புகின்றனர்.

இது குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருணாநிதியின் காலத்தில் அவர் கட்சியின் பொறுப்பிலிருந்து முற்றாக நீக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.