தமிழ்தேசிய கூட்டமைப்பின் சார்பில் வடமாகண முதலமைச்சர் வேட்பாளராக  யாரை நிறுத்தப்போகின்றீர்கள் என்பதை விரைந்து அறிவியுங்கள் என புளொட் டெலோ ஆகிய கட்சிகள்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வேண்டுகோள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே இரு கட்சிகளும் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளன.

அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவிவருகின்றன இது தொடர்பில் சம்பந்தன் தீர்க்கமான அறிவிப்பை வெளியிடவேண்டும் என அவை  கோரியுள்ளன.

மேலும் தற்போதைய முதலமைச்சர் கட்சியிலிருந்து வெளியேறும் பட்சத்தில் பாரிய பின்னடைவுகள் ஏற்படலாம் எனவும் இரு கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

விக்னேஸ்வரனிற்கு பெருமளவு மக்கள் செல்வாக்கு காணப்படுகின்றது எனவும் புளொட் டெலோ ஆகிய கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.