கிழக்கு மாகாணத்தில் நீதிமன்ற நிர்வாக நடவடிக்கைளை கண்காணிப்பதற்காக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார். 

மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடதொகுதிக்கு வருகைதந்த நீதி அமைச்சர் மாவட்டத்தின் நீதி நிருவாக நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். 

மேல் நீதிமன்ற நீதிபதி சந்திரமணி சவபாதம் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாலில் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிபதிகள் உட்பட பல நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் நீதிமன்றங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களின் செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுக்க அரசாங்கம் 984 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. 

இதற்கிணங்க நிர்மாணப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. இவற்றை கண்காணிக்க நீதி அமைச்சர் விஜயம் செயதுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

- ஜவ்பர்கான்