தமது வேதனத்தை அதிகரிக்கக்கோரி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ரயில்வே இயந்திர ஊழியர்களின் போராட்டம் 4 வது நாளை எட்டியுள்ளது.

மாதந்த வேதனத்தை அதிகரிக்கக்கோரி கடந்த புதன்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே இயந்திர கட்டுப்பாட்டு ஊழியர்கள், இன்றுடன் நான்காவது நாளாகவும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த போராட்டக்காரர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் ஆசன முன் பதிவினையும் நிறுத்தி வைத்துள்ள நிலையில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த போரட்டததை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.