இந்தியாவில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக  நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு  இது வரை 718 பேர் உயிரிழந்துள்ளனர் என  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உத்தரப்பிரதேசத்தில் 171 பேரும், மேற்கு வங்காளத்தில் 170 பேரும், கேரளாவில் 178 பேரும், மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அசாமில் 44 பேரும், நாகலாந்தில் 8 பேரும் என மொத்தம் 718 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும், கேரளாவில் 21 பேரும், மேற்கு வங்காளத்தில் 5 பேரும் என மொத்தம் 26 பேர் மாயமாகி உள்ளனர் என்றும், 244 பேர் காயம் அடைந்துள்ளனர் எனவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.