முழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் (The Plastics & Rubber Institute of Sri Lanka - PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்வதுடன் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு, இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற இக்கண்காட்சி ஆரம்ப நிகழ்வின் பிரதம அதிதியாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சரான ரிசாத் பதியுதீன் கலந்து சிறப்பித்துள்ளார்.

முழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் (The Plastics & Rubber Institute of Sri Lanka - PRISL) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்வதுடன் காலி மாவட்டச் செயலாளரான சோமரத்ன விதானபத்ரணவின் தலைமையின் கீழ் பிராந்திய ஆரம்ப அமர்வொன்றையும் அண்மையில் காலியில் ஏற்பாடு செய்துள்ளன. உற்பத்தித் தொழிற்துறையிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட பிரதம நிறைவேற்று அதிகாரிகள் இதில் பங்குபற்றியுள்ளனர். கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆகியவற்றின் ஆதரவுடன் இடம்பெறுகின்ற முழுமையான உற்பத்திக் கண்காட்சியான COMPLAST 2018 இடம்பெறும் இடத்திலேயே COMEXPO 2018 கண்காட்சியும் இடம்பெறவுள்ளது.

பிரதானமாக வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான வழங்கல்-வாங்கல் (business to business) இலக்கு சார்ந்த கண்காட்சியான COMPLAST 2018 முன்னர் Sri Lanka Plast என்ற பெயரில் இடம்பெற்றிருந்ததுடன் இம்முறை 2018 ஆகஸ்ட் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் ஆகஸ்ட் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை கொழும்பு BMICH மண்டபத்தில் கண்காட்சிக்காக திறந்திருக்கும். பெற்றுக்கொள்ளுதல் மற்றும் வாணிபம் அடங்கலாக உற்பத்தி சார்ந்த அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் ஒரு களமாக COMEXPO 2018 விளங்கும். இக்கண்காட்சிகள் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் களமாகவும் திகழ்வதுடன் இந்தியா, சீனா, தாய்வான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருகின்ற கண்காட்சியாளர்கள் தமது தொழில்நுட்பம் மற்றும் இயந்திரத் தளபாடங்களை இலங்கை தொழிற்துறைக்கு காண்பிக்கவுள்ளனர். இலங்கையில் பிளாஸ்திக் தொழிற்துறையிலிருந்து வருகை தருகின்ற பார்வையாளர்கள் பிளாஸ்திக் துறையில் இயந்திர தளபாடங்கள், மூலப்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அதிநவீன மேம்பாடுகள் தொடர்பான முழுமையான தகவல் விபரங்களை கண்டறிந்து கொள்ள முடியும். 5 ஆவது முறையாகவும் இடம்பெறுகின்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ள இயந்திர தளபாடங்கள் தொடர்பான 12 இற்கும் மேற்பட்ட நேரடி விளக்கங்கள் சிறப்பம்சமாக அமையவுள்ளன. கண்காட்சியாளர்களாக கலந்து கொள்கின்ற உள்நாட்டு நிறுவனங்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரித்துள்ளது. இலங்கை, இந்தியா, சீனா, தாய்வான், அமெரிக்கா, ஜேர்மனி மற்றும் ஏனைய நாடுகளும் கண்காட்சிப்படுத்தும் நாடுகளில் அடங்கியுள்ளன.

மூலப்பொருட்கள், பொலிமர்கள் மற்றும் ரெசின்கள், கலவைகள் மற்றும் உலோகக் கலவைகள், இடைச்செயற்பாடுகள் மற்றும் கலப்புக்கள் அடங்கிய பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. விசேட இரசாயனங்கள், மாஸ்டர்பட்ச்கள் (masterbatches), கூடுதல் சேர்க்கைப் பொருட்கள், நிறமூட்டிகள், நிரப்பிகள் மற்றும் வலுவூட்டிகளும் அடங்கியுள்ளன. துல்லிய இயந்திரத்தொகுதி, அச்சு வார்ப்புக்கள் மற்றும் நிறச்சாயங்கள் மற்றும் அச்சிடல் மாற்று இயந்திரம், அலங்காரம், வெட்டுதல் மற்றும் சுற்றுதல், லெமினேட் செய்தல், பை மற்றும் கைப்பை தயாரித்தல், ஆய்வு உபகரணம், மென்பொருள் தீர்வுகள், மீள்சுழற்சிப்படுத்தும் இயந்திரங்கள் மற்றும் பயிற்சி மையங்கள் அடங்கிய உபகரணத் தொகுதிகளும் இங்கு இடம்பெறவுள்ளன.

முழுமையான உற்பத்திக் கண்காட்சியான COMEXPO,  உற்பத்தித் துறையின் தேவைகளுக்கு அனுசரணையளிக்கின்ற இயந்திர உபகரணங்கள், பண்ட இடம்மாற்று தீர்வுகள், மின்னியல் போன்றவற்றையும் காட்சிப்படுத்தவுள்ளது. இக்கண்காட்சியில் குறிப்பாக இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறையிலிருந்து கைத்தொழில் அபிவிருத்திச் சபை அனுசரணை வழங்கும் நிறுவனங்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொள்ளவுள்ளன.

PRISL இன் பிரதித் தலைமை அதிகாரியான கௌஷால் ராஜபக்ச கூறுகையில்,

“எந்தவொரு தொழிற்துறையைப் பொறுத்தவரையிலும் கண்காட்சிகளே அவற்றை முன்னெடுத்துச் செல்பவையாகக் காணப்படுகின்றன. துறை சார்ந்த இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவற்றின் தற்போதைய அபிவிருத்தி மற்றும் மேம்பாடுகளை அவை காண்பிப்பதால், துறையின் வளர்ச்சியில் வழிகாட்டியாக விளங்குகின்றன. கட்டுபடியாகும் செலவுடன் புதிய மற்றும் பொருத்தமான தொழில்நுட்பங்களை உள்வாங்குவதற்கும் அவை அனுசரணையளிக்கின்றன. அவை துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்தி, புதிய தொழில் வாய்ப்புக்களையும் புதிய தொழில் முயற்சியாளர்களையும் தோற்றுவிக்கின்றன” என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

“இலங்கையின் பிளாஸ்திக் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு தேசிய அளவிலான முன்னெடுப்பொன்றை அமைச்சு ஆரம்பிப்பதால் அதற்கு புதுப்பொலிவு கிட்டவுள்ளது. இலங்கையில் வருடாந்த பிளாஸ்திக் நுகர்வானது 250,000 மெட்ரிக் தொன்களை அண்மித்ததாக உள்ளதுடன், 18-20 வீத வளர்ச்சி வீதமும் மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைக்காக பிளாஸ்திக் உற்பத்தியின் 1,000 வரையான தொழிற்சாலைகள் ஈடுபட்டுள்ளதுடன் அவற்றில் பெரும்பாலானவை சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறையைச் சார்ந்தவை” என்று குறிப்பிட்டார்.

இக்கண்காட்சியானது உள்நாட்டு பிளாஸ்திக் தொழிற்துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பது மட்டுமன்றி, இலங்கையிலிருந்து பிளாஸ்திக் முடிவு உற்பத்திகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் ஒரு உந்துசக்தியாக அமையும் என்று இதன் ஏற்பாட்டாளர்களான Smart Expos & Fairs India (Pvt) Ltd மற்றும் இலங்கை பிளாஸ்திக் மற்றும் இறப்பர் நிலையம் ஆகியன நம்பிக்கை வெளியிட்டுள்ளன.

SMART EXPOS & FAIRS (INDIA) PVT. LTD. (SEFIPL) ஆனது உள்நாட்டு மற்றும் சர்வதேச கண்காட்சிகளைக் கையாள்வதில் நீண்ட அனுபவத்தைக் கொண்டுள்ளது. பிளாஸ்திக், பொதியிடல் மற்றும் உற்பத்தி போன்ற உலகில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற பொருளாதாரங்கள் மத்தியில் வர்த்தகக் கூட்டிணைவுகளுக்கு அனுசரணையளிப்பதே தொழிற்துறைக் கண்காட்சிகளின் பிரதான இலக்காகும். குறிப்பாக இந்தியா, இலங்கை, கிழக்கு ஆபிரிக்கா, மியன்மார் மற்றும் வியட்னாம் போன்ற அபிவிருத்தியடைந்து வருகின்ற நாடுகளில் பிளாஸ்திக், இறப்பர் மற்றும் உற்பத்தித் துறையில் தொழில்சார் வர்த்தகக் கண்காட்சிகளை SEFIPL ஏற்பாடு செய்து வருகின்றது. சந்தைப்படுத்தல் மற்றும் பிளாஸ்திக் பொதியிடல் துறையில் நீண்ட அனுபவத்தை SEFIPL உறுப்பினர்கள் கொண்டுள்ளனர்.