(எம்.மனோசித்ரா)

ஹபரண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனாந்தர பகுதியில் நேற்றிரவு 11 மணியளவில்  ஏற்பட்ட திடீர் தீப்பரவலினால் 40 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக ஹபரண பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து குறித்த தீ பரவலை தீயணைப்பு படையினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிர் சேதங்கள் அல்லது சொத்து சேதங்கள் எவையும் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.