எரிபொருள் விலை இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அதிகரிக்கவுள்ளது.

மாதாந்த எரிபொருள் சுத்திரத்திற்கமைய எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

அதன்படி 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றருக்கு 2 ரூபாவால் அதாவது 155 ரூபாவில் இருந்து 157 ரூபாவாக அதிகரிக்கின்றது.

சுப்பர் டீசல் ஒரு லீற்றர் ஒரு ரூபாவால் அதாவது 129 ரூபாவில் இருந்து 130 ரூபாவாக அதிகரிக்கின்றது.

இதேவேளை, 92 ஒக்டெய்ன் பெற்றோல் மற்றும் ஓட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.