வாதுவை விருந்துபசாரத்தில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். 

கடந்த சனிக்கிழமை வாதுவை பகுதியிலுள்ள விருந்துபசார நிகழ்வொன்றில் வழங்கப்பட்ட உணவினை உட்கொண்டதில்  நால்வர் பாதிப்புக்குள்ளாகி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தனர்.

இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பேரை நேற்றையதினம் க‍ைதுசெய்து இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் அவர்களை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.