காட்டு யானையால் கொல்லப்பட்டோர் 375 ; கொல்லப்பட்ட யானைகள் 1200 - கட்டுப்படுத்த மின்சாரவேலி !

Published By: Priyatharshan

10 Aug, 2018 | 02:55 PM
image

கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை காட்டுயானைகள் தாக்கி 375 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிராமவாசிகளால் 1200 யானைகள் கொல்லப்பட்டிருப்பதாகவும் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் காட்டு யானைகளின் நடமாட்டத்தைத் தடுக்க சுமார் 3 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்திற்கு மின்சார வேலி அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

காட்டு எல்லைகளைக் கடந்து ஊர்ப்புறங்களையும் விவசாய நிலங்களையும் நோக்கி வருகின்ற யானைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 2 ஆயிரத்து 651 கிலோ மீற்றர் (1556 மைல்) நீளமான மின்சார வேலிகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

அத்துமீறி விவசாய நிலப்பரப்புக்களிலும், ஊர்மனைகளுக்குள்ளேயும், பிரதான வீதிகளிலும் உலா வருகின்ற காட்டு யானைகளினால் தாக்கப்பட்டு 375 பேர் இதுவரையில் கொல்லப்பட்டிருக்கின்றனர். கடந்த ஐந்து வருடங்களில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருக்கின்றது. 

யானைகளின் அத்துமீறிய பிரவேசத்தினால் ஆத்திரமுற்ற கிராமவாசிகளினால் 1200 யானைகள் இதுவரையில் கொல்லப்பட்டிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கின்றது.

யானைக்கும் மனிதனுக்கும் இடையிலான இந்தப் போராட்டத்தில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புக்களைத் தவிர்த்து, இரு தரப்பினரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது. 

இந்த அவசிய தேவையின் நிமித்தம் வனவிலங்கு பாதுகாப்புப் பிரதேசங்களின் எல்லைகளிலும், காட்டு எல்லைப்புறங்களிலும் யானைகள் வெளியேறிச் செல்வதைத் தடுப்பதற்காக ஏற்கனவே 4349 கிலோ மீற்றர் நீளமான மின்சார வேலிகளை அரசாங்கம் அமைத்துள்ளது. 

இந்த வேலியை மேலும் சீரமைத்துப் பேணுவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

இந்த மின்சார வேலிகள் யானைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தமாட்டாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திப் பராமரிப்பதற்குப் பெரிதும் உதவும் என்று அவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

நாட்டின் 35 வீதமான விவசாய உற்பத்தியை யானைகள் உள்ளிட்ட காட்டு விலங்கினங்கள் சேததப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தேசிய வனவிலங்கு பிரதேசங்களில் இருந்து வெளியேறி கிராமங்களுக்குள் படையெடுத்து விவசாயப் பயிர்களை நாசமாக்கும் யானைகளைக் கட்டுப்படுத்துவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார். 

ஜனாதிபதியின் இந்தக் கோரிக்கை வெளியாகிய இரண்டு தினங்களில் யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 2 ஆயிரத்து 651 கிலோ மீற்றர் நீளமான மின்சார வேலி அமைப்பதற்கான நடவடிக்கை குறித்த அரசாங்கத்தின் அறிவித்தல் வெளியாகியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் இந்த வேலைத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் உடனடியாக வெளியிடப்படவில்லை.

சனத்தொகை மதிப்பீட்டின்படி 21 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கைத் தீவில் உள்ள ஒரு மில்லியன் (10 இலட்சம்) குரங்குகள் இந்த வருட ஆரம்பத்தில் தேங்காய் உற்பத்தியை பெரிய அளவில் சேதப்படுத்தி உள்ளன. இதனால், அறுவடையில் ஏற்பட்ட வீழ்ச்சி தேங்காய் விலையை அதிகரிக்கச் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார். 

கிராமவாசிகளின் விவசாய உற்பத்திகளை கட்டாக்காலியாகத் திரியும் யானைகள் சேதப்படுத்துவது பற்றி நாளாந்தம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

விவசாய உற்பத்திகளைச் சேதப்படுத்தியது தொடர்பில் கடந்த ஐந்து வருடங்களில் 5800 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இலங்கையின் பௌத்த மதச் சின்னமாகிய யானைகள் சட்ட ரீதியாக பாதுகாக்கப்படுகின்றன.  யானைகளைக் கொல்வது மரண தண்டனைக்குரிய குற்றமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையின் பல பகுதிகளிலும் 7500 யானைகள் வசிப்பதாக வனவிலங்கு திணைக்களத்தின் புள்ளிவிபரத் தகவல் கூறுகின்றது.

இருப்பினும் தமது விவசாய உற்பத்திகளைச் சேதப்படுத்துவதனால் சிற்றமடையும் கிராமவாசிகள் யானைகளை நஞ்சூட்டியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் கொல்லுகின்ற சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. 

இதைத் தவிர காட்டுப்பிரதேசங்களின் ஊடாகச் செல்லும் ரயில் பாதைகளைத் தனியாகவும், கூட்டம் கூட்டமாகவும் கடந்து செல்கின்ற யானைகள் விரைந்தோடி வருகின்ற ரயில்களில் அடிபட்டு விபத்துக்களில் மரணமடையும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றன. 

வவுனியா செட்டிகுளம் பகுதியில் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கிச்சென்ற இரவு கடுகதி தபால் ரயில் மோதியதில் கடந்த வருடம் நான்கு யானைகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்கள் எவ்வாறு...

2025-03-23 17:50:25
news-image

முஸ்லிம் கட்சிகளிடையே அதிகாரப் போட்டி

2025-03-23 15:29:45
news-image

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் காட்டில்...

2025-03-23 14:49:08
news-image

சுயபிம்பத்தை ஊதிப்பெருக்கும் அதிகார வெறிக்குள் பகடைக்...

2025-03-23 14:54:45
news-image

ஜோர்தானின் அப்துல்லாஹ்வுக்கும் ஸெலென்ஸிக்கும் இடையிலான வித்தியாசம்

2025-03-23 14:43:28
news-image

கிறீன்லாந்து – எதிர்காலம் என்ன?

2025-03-23 14:29:17
news-image

முஸ்லிம் அரசியலின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகும்...

2025-03-23 15:19:29
news-image

தேசபந்து தென்னகோன் விவகாரம்; அரசாங்கத்துக்கு தோல்வியா?

2025-03-23 15:02:53
news-image

புதிய கூட்டு வலுப்பெறுமா?

2025-03-23 13:13:37
news-image

சி.ஐ.ஏயின் இரகசியத்தளம்

2025-03-23 13:00:56
news-image

இதுவா சமத்துவ நிலை?

2025-03-23 13:06:07
news-image

பொன்சேகாவை அரவணைப்பாரா அநுர?

2025-03-23 12:42:43