(நா.தினுஷா) 

புகையிர சேவைகள் மாலையாகும் போது வழைமைக்கு திரும்பும் என தொரிவித்த புகையிரத பொது முகாமையாளர் விஜய சமரசிங்க இன்று காலை முதல் சில பிரதேசங்களிலுள்ள புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் வீரகேசரி இணையத்தளத்திற்கு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 

சம்பள உயர்வினைக்கோரி கடந்த புதன்கிழமை புகையிரத தொழிற்சங்கத்தினர் முன்னறிவித்தலின்றி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தனார். புகையிரத தொழிற்சங்கத்தினரின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினால் மக்கள் பெரிதும் பாதிப்படைந்திருந்ததுடன் சுற்றுலாப்பயணிகளும் பெரிதும் அசெளகரியத்தை எதிர்நோக்கியிருந்தனர்.

இதனை கருத்திற்கொண்டு இன்று காலையுடன் கண்டியிலிருந்து 2 புகையிரதங்களும் மற்றும் ரம்புக்கென, மீரிகம, காலி, அவிசாவெல்ல ஆகிய பிரதேசங்களில் இருந்து சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன்  எரிபொருள் ஏற்றிச்செல்லும் 2 புகையிரதங்களும் புற்க்கோட்டை புகையிரத நிலையத்தை நோக்கி பயணித்துள்ளன. 

இன்று மாலையாகும் போது புகையிரத சேவைகளை வழைமைக்கு திருப்ப எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.