பாதுகாப்பை இழக்கின்ற பெண்கள் காப்பகங்கள்

Published By: Daya

10 Aug, 2018 | 03:18 PM
image

உத்தரப்பிரதேச மாநிலத்தில் காப்பகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் 26 பெண்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா பகுதியில் இயங்கி வந்த சிறுமிகள் காப்பகத்தில் சிறுமிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த காப்பகத்தில் இருந்து சிறுமி ஒருவர் தப்பிவந்து பொலிஸாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காப்பகத்தின் மேலாளர்கள் இருவர் கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டை நீக்கம் செய்து உத்தரவிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அனைத்து காப்பகத்திலும் சோதனை நடத்துமாறும் உத்தரவிட்டார்.

முதலமைச்சரின் உத்தரவின் பேரில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 

அந்தவகையில், அசல்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் காப்பக குறிப்பேடில் பதிவு செய்யப்பட்ட 15 பெண்களில் 12 பேர் காணவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக காப்பக நிர்வாகி கூறுகையில், அனைத்து பெண்களும் பணிக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், முறையான பதிவு ஏதும் காப்பக நிர்வாகிகள் சமர்ப்பிக்கவில்லை.

அதேபோல், அஸ்ட்புஜா நகர் பகுதியில் இயங்கிவந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 14 பெண்கள் மாயமானது கண்டறியப்பட்டது. இந்த காப்பக நிர்வாகத்தினரும் முறையான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை.

இரண்டு காப்பகங்களில் இருந்தும் 26 பெண்கள் மாயமான நிலையில், விரைவில் அந்த பெண்கள் குறித்த தகவல்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லையெனில் இந்த இரண்டு காப்பகங்களிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52