கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தான் ஹோட்டலொன்றில் தற்பாதுகாப்பி;ற்காகவே மோதலில் ஈடுபட்டதாக இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென்ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரிஸ்டலில் உள்ள நீதிமன்றத்தில் இடம்பெற்றுவரும் விசாரணையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம்  செப்டம்பர் மாதம் ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற மோதலின் போது பென்ஸ்டோக்ஸ் இருவரை தாக்கி சுயநினைவிழக்கச்செய்தார் என குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளையே ஸ்டோக்ஸ் எதிர்கொண்டுள்ளார்.

அவ்வேளை ஹோட்டலில் காணப்பட்ட இரு  ஓரினச்சேர்க்கையாளர்களை  காப்பாற்றுவதற்காகவே நான் வன்முறையில் ஈடுபட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

ஹேலும் அலியும் அந்த இரு ஓரினச்சேர்க்கையாளர்களை நோக்கி கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டவேளை நான் குறுக்கிட்டு அவ்வாறு நடந்துகொள்ளவேண்டாம் என குறிப்பிட்டேன் என பென்ஸ்டோக்ஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

நான் என்னை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டேன்,அலி தனது கையில் போத்தலை  எடுத்ததும் நான் உடனடியாக என்னசெய்யவேண்டும் என தீர்மானித்தேன் என பென்ஸ்டொக்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சினை ஆரம்பமானதும் அந்த இரு நபர்களால் பலரிற்கு ஆபத்து என்பதை நான் உணர்ந்தேன் அதில் தலையிட தீர்மானித்ததும் அதன் பின்னர் தற்பாதுகாப்பிற்காகவே அனைத்தையும் செய்தேன் என ஸ்டோக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.