அரசியல் யாப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிக் கட்சித் தலைவர் பதவியை தனக்கு மாற்றுவதற்கு இயலாது என சபாநாயகர் கருஜயசூரிய இன்று காலை சபையில் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க் கட்சியினர், தமது குழுவில் 70 பேர் உள்ளனர். ஆகவே பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் எமக்கே அதிகளவிலான ஆசனங்கள் உள்ளதன் காரணமாக எதிர்க்கட்சிப் பதவியை தமக்கே பெற்றுத் தர வேண்டும் என சபாநாயகர் கருஜயசூரியவிடம் பல்வேறு கோரிக்கைகளை விடுத்து வந்தனர்.

இந் நிலையிலேயே இன்று காலை சபாநாயகர் தலைமையில் கூடிய பாராளுமன்ற அமர்வின் போதோ சபாநாயகர்,  அரசியல் யாப்பு மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்களின் அடிப்படையில் எதிக் கட்சித் தலைவர் பதவியை தனக்கு மாற்றுவதற்கு இயலாது என அறிவித்தார்.