வலது கால் முழங்காலுக்கு சிகிச்சை பெற பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவியின் இடது காலுக்கு சத்திரசிகிச்சை செய்துள்ளதாக மாணவியின் தந்தை பேராதனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

பிலிமதலாவை விஜயதுங்க மாவத்தையில் வசிக்கும் ஒன்பதாம் ஆண்டில் கல்விபயிலும் குறித்த மாணவிக்கு சிறு வயது முதல் வலது முழங்காலில் சிறு கட்டி ஒன்று காணப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை பெற்றுகொள்வதற்காக கடந்த 20ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் 16ஆம் வாட்டில் தனது மகள் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ள தந்தை, பின்னர் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மகளை மீண்டும் வாட்டுக்கு கொண்டுவரும் போது, வலது காலுக்கு பதிலாக இடது காலில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் வைத்தியரிடம் வினவியபோது, எதிர்வரும் 3ஆம் திகதி வலதுகாலுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார்.