யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவை  கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்தது. 

உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஈவா வணசுந்தர, நளின் பெரேரா மற்றும் பிர­சன்ன ஜய­வர்­தன ஆகியோர் அடங்­கிய மூவர் கொண்ட நீதி­ய­ர­சர்கள் குழு முன்­னி­லையில், இந்த மேன்முறை­யீட்டு மனு நேற்று முதல் தட­வை­யாக விசா­ர­ணைக்கு வந்த போதே  டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மேன்முறை­யீட்டை ஆராய நீதி­யரசர்கள் தீர்­மா­னித்­தனர். 

இந்த வழக்கில் 300 பக்­கங்­க­ளுக்கு மேற்­பட்ட  தீர்ப்பில், பூபா­ல­சிங்கம் ஜெயக்­குமார், பூபா­ல­சிங்கம் தவக்­குமார், மகா­லிங்கம் சசி­தரன், தில்­லை­நாதன் சந்­தி­ர­ஹாசன், சிவ­தேவன் துஷ்யந்த், ஜெய­தரன் கோகிலன், சுவிஸ் குமார் எனப்­படும் மகா­லிங்கம் சசி­குமார் ஆகிய ஏழு­ பே­ருக்கு மரண தண்­டனை வழங்­கப்­பட்­டது.

இந்த ஏழு பேரும் நேற்று உயர் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலை­யி­லேயே அவர்­க­ளது மேன்முறை­யீடு பரி­சீ­ல­னைக்கு எடுக்­கப்­பட்டு, மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக எதிர்­வரும் டிசம்பர் 13 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்பட்­டமை குறிப்பிடத்தக்கது.