பாகிஸ்தான் அணிக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டியில் பட்லர் 46 பந்தில் சதம் கடக்க, இங்கிலாந்து அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரையும் கைப்பற்றியது.
இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதும் 4 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. முதல் மூன்று போட்டி முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இரு அணிகள் மோதிய கடைசி மற்றும் நான்காவது போட்டி துபாயில் நடந்தது.
பட்லர் அதிரடி
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு ஜேசன் ரோய், ஹேல்ஸ் ஜோடி சிறப்பான ஆரம்பத்தை தந்தது. ஹேல்ஸ் 22 ஓட்டங்கள் எடுத்தார். இதன் பின் இணைந்த ஜோ ரூட், ஜேசன் ரோய் ஜோடி அசத்தியது. ரோய் (102) சதம் கடந்தார். தன் பங்கிற்கு ரூட் (71) அரை சதம் அடித்தார். ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். எதிரணி பந்துவீச்சை துவம்சம் செய்த இவர் 46 பந்தில் சதம் எட்டினார்.
மோர்கன் (14), ஜேம்ஸ் டெய்லர் (13) நிலைக்கவில்லை. முடிவில், இங்கிலாந்து அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 355 ஓட்டங்களை எடுத்தது. பட்லர் (116 ஓட்டங்கள், 10 பவுண்டரி, 8 சிக்சர்), மொயீன் அலி (4) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மாலிக் ஆறுதல்
கடின இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு அசார் அலி (44) ஓரளவு கைகொடுத்தார். பாபர் அசாம் (51), மாலிக் (52) அரை சதம் கடந்தார்.
ரிஜ்வான் (11), சர்பராஸ் அகமது (24) சிக்கினர். மற்றவர்கள் ஏமாற்ற, பாகிஸ்தான் அணி 40.4 ஓவரில் 271 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 3- 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
சாதனை சதம்
இங்கிலாந்து அணி சார்பில் ஒரு நாள் போட்டியில் குறைந்தபந்தில் (46) சதம் கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார் பட்லர். அடுத்த இரண்டு இடங்களிலும் இவரே உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 66 (பர்மிங்காம், 2015), இலங்கைக்கு எதிராக 61 பந்தில் (லோர்ட்ஸ், 2014) ஏற்கனவே பட்லர் சதம் விளாசியிருந்தார்.
ஒரு நாள் அரங்கில் அதிவேகமாக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 7வது இடத்தை, நியூசிலாந்தின் ரைடருடன் பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் தென் ஆப்ரிக்காவின் டிவிலியர்ஸ் (31 பந்து) உள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM