(நா.தினுஷா)

புகையிரத சேவை ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்க வேண்டுமானால் அவர்கள் அரசாங்கத்துடன் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்று போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரிதியமைச்சர் அசோக அபயசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

புகையிரத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்படுள்ளதுடன் எதிர்வரும் இரண்டு மாதங்களில் அதனை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம். 

அத்துடன் புகையிரதசேவை ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவேண்டுமானால் அவர்கள் அரசாங்கத்துடன் சுமுகமான கலந்துரையாடலை மேற்கொள்ள முன்வர வேண்டுமென்று.

மேலும் மக்களுக்கு ஏற்ப்பட்டுள்ள போக்குவாரத்து சிரமத்தை குறைப்பதற்கான விசேட பஸ்சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.