(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) 

ஜனநாயகம் பற்றி பேசும் இந்த அரசாங்கம் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவியை பொது எதிரணிக்கு தரவேண்டும். 70 பேர் எதிர்க்கட்சியின் கடமையை செய்யும் நிலையில் எம்மை புறக்கணிக்க வேண்டாம் என பொது எதிரணி உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பள மற்றும் ஏனைய  கொடுப்பனவு குறித்த பிரேரணை, சேர் பெறுமதி வரி ( திருத்த ) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

நல்லாட்சி அரசாங்கத்தில் எந்தவொரு சுயாதீன ஆணைக்குழுவும் சுயாதீனமாக இயங்கவில்லை. பொலிஸ் பக்கசார்பாக செயற்படுகின்றது. சமுர்த்தி  சேவையாட்கள்  மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். ஓய்வுபெற்ற அரச சேவையாட்களுக்கு  சமுர்த்தி சேவை மட்டுப்படுத்தப்படுகின்றது. சாதாரண மக்களுக்கு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்க இடமளிக்க வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.