தொற்றுநோய் பரவல் காரணமாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மூன்று பீடங்கள் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் விஜேவர்தன தெரிவித்துள்ளார். 

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகத்தின் சில பீடங்களிலுள்ள 40 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வயிற்றோற்றம், சின்னம்மை மற்றும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 

இந் நோயானது ஏனைய மாணவர்களுக்கும் பரவாமல் இருப்பதற்காகவே பல்கலையின் சமூகவியல் மற்றும் மானுடவியல்,  முகாமைத்துவம், பன்முக அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியே பீடங்கள் நேற்று முதல் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மூடப்பட்டுள்ளது.