பஷில் ராஜபக் ஷவின் “எலும்புத் துண்டுகளை” சாப்பிட்டோர் விரைவில் வாந்தி எடுக்க நேரிடும். அதேவேளை பஷிலுக்கு எதிரான முறைப்பாடுகளை பொதுமக்கள் விசேட நிதிக் குற்றப்பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி) அறிவிக்கலாம் என்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்ஸா தெரிவித்தார். 
மஹிந்தானந்த அளுத்கமகே, ரோஹித அபேகுணவர்த்தன போன்றோருக்கு எதிராக மஹிந்த ராஜபக் ஷவே குற்றச்சாட்டுக்களை சுமத்தினார் என் றும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுமுன் தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அரசாங்கத்தின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை பொலிஸாரும் விசேட நிதிக்குற்றப் பிரிவினரும் மேற்கொண்டனர். இவ் விசாரணைகள் பெரும்பாலும் முடிந்துவிட்டன. இவ்வாறு முடியப்பெற்ற விசாரணைகளில் சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். ஊழல் மோசடிக்காரர்களை கைதுசெய்யவில்லையா? விசாரணைகளுக்கு என்ன நடந்தது என கடந்த காலங்களில் கேள்விகளை எழுப்பினார்கள். ஆனால் இன்று விசாரணைகள் முடிவுபெற்று சந்தேகநபர்களை கைதுசெய்து சட்டத்தின் முன்நிறுத்த முனைகையில் அதனை அரசியல் பழிவாங்கல்கள் என முத்திரை குத்துகின்றனர்.
இதில் அரசியல் பழிவாங்கல்கள் கிடையாது. அனைத்தும் சட்டப்பிரகாரமே இடம்பெறுகின்றன. எனவே நல்லநல்ல விளையாட்டுக்களை விடியும் போது கண்டுகொள்ளலாம்.
அரசின் பொறுமை எல்லை தாண்டிவிட்டது. இனி சட்டம் தன் கடமையை விரைவுபடுத்தும். ஊழல் மோசடிக்காரர்களுடன் எந்தவிதமான “டீலும்” கிடையாது. அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தான் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் ரோஹித அபேகுணவர்த்தன ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைத்தார்.
கடந்த ஆட்சியில் ஒரு சிலர் இறைச்சியை முழுமையாக சாப்பிட்டார்கள். ஒரு சிலர் பஷில் ராஜ பக் ஷ தூக்கியெறிந்த எழும்புத் துண்டுகளை சாப்பிட்டார்கள். இவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் வாந்தி எடுக்க நேரிடும். கடந்த ஆட்சியில் தங்காலை மார்க்கெட்டின் மீன் வியாபாரியும் ஜனாதிபதியின் ஆலோசகராக கடமை புரிந்துள்ளார்.
பஷில் ராஜபக் ஷ சமுர்த்தி பணமான 7000 மில்லியன் ரூபாவை பதுளை மாகாண சபைத் தேர்தலில் சசீந்திர ராஜபக் ஷவை வெற்றிபெறச் செய்வதற்கு மக்களுக்கு இலவசமாக மேற்கண்ட தொகையை வழங்கினார். அவரது தேவைக்கேற்பவே சுதந்திரக் கட்சியின் அலுவலகங்கள் நிர்மாணிக்கப்பட்டன. இதனை எதிர்த்தேன். ஆனால் தடுக்க முடியவில்லை. சட்டவிரோதமாக யானைகளை வைத்திருந்தோரை கைதுசெய்தேன். இடையில் அதனை நிறுத்துமாறு பஷில் உத்தரவு போட்டார். எனவே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த நல்லாட்சியில் முன்னாள் ஆட்சியின் ஊழல் மோசடிக்காரர்களை இணைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சா தெரிவித்தார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM