ஜெயம் ரவி நடித்து வரும் ‘அடங்க மறு ’ என்ற படத்தில் நடிகை பூர்ணா சட்டத்தரணியாக நடித்திருக்கிறார்.

நடிகை பூர்ணா சவாலான வேடங்களில் நடித்து திறமையான நடிகை என்று பெயரெடுத்தவர். 

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சவரக்கத்தி என்ற படத்தில் கர்ப்பிணியாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர். இவர் தற்போது கார்த்திக் தங்கவேல் என்ற அறிமுக இயக்குநர் இயக்கும் அடங்க மறு என்ற படத்தில் சட்டத்தரணியாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து பூர்ணாவிடம் கேட்டபோது,

‘இயக்குநர் போன் மூலம் தொடர்பு கொண்டு கதையையும், எம்முடைய கதாப்பாத்திரத்தையும் சொன்னார். சட்டத்தரணி  கதாபாத்திரம் என்றவுடன் ஒப்புக்கொண்டேன். 

ஏனெனில் இதற்கு முன் நான் சட்டத்தரணியாக நடித்ததில்லை. படபிடிப்பின் போது அரங்கம் தான் என்றாலும் சட்டத்தரணியாக நடிக்கும் முன் சற்று பதற்றப்பட்டேன். 

உடன் நடித்த நாயகன் ஜெயம் ரவி, இயக்குநர் கார்த்திக் தங்கவேல் ஆகியோர் என்னை சௌகரியமான சூழலுக்கு அழைத்து சென்ற பிறகு நடித்தேன். படத்தில் எம்முடைய கதாப்பாத்திரம் திரைக்கதையில் ஒரு திருப்புமுனையான கதாபாத்திரம் என்பதால் நம்பிக்கையுடன் நடித்திருக்கிறேன்.’ என்றார்.