திருகோணமலையில் பதினொரு வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அம் மாணவியின் சித்தப்பாவிற்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

திருகோணமலை மொரவேவ பகுதியை சேர்ந்த 11 வயதுடைய மாணவி ஒருவரை அவரது சித்தப்பா, கடந்த 2004 ஆம் ஆண்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியிருந்தார். இது தொடர்பான குற்றப் பதிவு பத்திரமானது திருகோணமலை மேல் நீதிமன்றில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதன்போதே திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குற்றவாளிக்கு 20 ஆண்டு கால கடூழிய சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா தண்டப் பணமும் அதனை கட்டத் தவறினால் ஒரு மாத கடூழிய சிறையும், 5 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும் அதனை கட்டத்தவறினால் மேலும் இரண்டு ஆண்டு கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.