(எம்.சி.நஜிமுதீன்)

வைத்தியர்களுக்கு எதிராக பொதுமக்கள் முறைப்பாடு செய்கின்றபோதிலும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளது. எனவே வைத்திய சபையின் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

வைத்திய சபையானது மக்களின் விடயத்தில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். மாறாக அது வைத்தியர்களை பாதுகாக்கும் வகையில் மாத்திரம் செயற்படக்கூடாது. வைத்தியர்கள் பிழை செய்தால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.