குசால் பெரேரா, சானக்க மற்றும் திஸர பெரேராவின் அதிரடி ஆட்டம் காரணமாக தென்னாபிரிக்க அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை குவித்து வெற்றியிலக்காக தென்னாபிரிக்க அணிக்கு 307 ஓட்டங்களை நிர்ணயித்தது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று கண்டி பல்லேகல சர்வதேச விளையாட்டாரங்கில் பகலிரவு ஆட்டமாக பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமாகவிருந்தது.

இருந்தபோதும் மழைக் குறுக்கீட்டதன் காரணாக போட்டி காலம் தாழ்த்தியே ஆரம்பித்தது. இதனால் போட்டியில் ஓவர்களின் எண்ணிக்கை 43 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.

இலங்கை அணி சார்பாக முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய உபுல் தரங்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி இலங்கைக்கு சிறந்ததொரு அடித்தளத்தையிட்டனர். இதன் மூலம் இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை வலுவான நிலைக்கு முன்னேறிக் கொண்டிருக்கும்போது 8.2 ஆவது ஓவரில் மீண்டும் மழை குறுக்கிட்டது.

இதனையடுத்து போட்டி இடை நிறுத்தப்பட்டதுடன் சற்று நேரம் சென்று மழை நின்றதும் போட்டி மீண்டும் ஆரம்பமானதுடன் ஓவர்களின் எண்ணிக்கையும் 39 ஓவராக மட்டுப்படுத்தப்பட்டது.

அதன் பின்னர் மழைக்கு முன்னராக சிறப்பாக ஆடி வந்த உபுல் தரங் மற்றும் திக்வெல்ல ஆகியோர் 61 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை நிரோஷன் திக்வெல்ல 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அவரையடுத்து குசல் மெண்டீஸுடன் இணைந்த உபுல் தரங்க 14.3 ஓவரின் போது 36 ஓட்டங்களை பெற்றுக் கொண்டு முல்டர் வீசிய பந்தில் வில்லியமிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 100 ஆக இருக்கும் வேளை 14 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த குசல் மெண்டீஸ் மஹாராஜின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். அதன்  பின் அணித் தலைவர் மெத்தியூஸும் குசல் பெரராவும் இணைந்து இலங்கை அணியை சரிவு பாதையிலிருந்து மீட்டெடுத்தனர்.

இவர்கள் இருவருமாக  இணைந்து அணிக்காக 59 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த வேளை மெத்தியூஸ் லுங்கி நிகிடியின் பந்து டீகொக்கிடம் பிடிகொடுத்து வெளியேற அடுத்து வந்த தனஞ்சய டிசில்வா 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

களத்தில் தென்னாபிரிக்க அணியின் பந்துகளை பந்தாடி வந்த குசல் பெரராவும் தனது பங்கிற்கு அணிக்காக அரைசதம் ஒன்ற‍ை பெற்றுக் கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கை 195 ஆக இருக்கும் போது 32 பந்துகளில் 6 நான்கு ஒட்டங்கள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 51 ஓட்டங்கள‍ை பெற்று ஆட்டமிழந்து வெளியேறினார். 

ஒரு கட்டத்தில் இலங்கை அணி 28.4 ஆவது ஓவரின் போது 6 விக்கெட்டுக்களை இழந்து 200 ஓட்டங்களை கடந்தது. 

இதையடுத்து திஸர பெரராவும் சானக்கவும் ஜோடி சேர்ந்து தென்னாபிரிக்க அணியின் பந்துகளை பறக்க விட்டனர். இவர்கள் காட்டிய அதிரடி காரணாக இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது 

சானக்க 37 ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு நான்கு ஒட்டங்கள் ஒரு ஆறு ஓட்டங்களை விளாசியதன் மூலம் சானக்க 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதையடுத்து இந்த ஜோடி இணைந்து 65 பந்துகளில் 100 ஓட்டங்களை அணிக்கா பெற்றுக் கொடுத்தது. இதனையடுத்து மறுமுனையில் அதிரடி காட்டிய திஸார பெரோரா இறுதி ஓவரில் 32 பந்துகளை எதிர்கொண்டு அரைசதம் விளாச அணியின் ஓட்ட எண்ணிக்கை 300 தாண்டியது. 

இதன்பின் 38.3 பந்தில் பெலக்கொய்யோவோவின் பந்து வீச்சில்  சானக்க 4 நான்கு ஓட்டங்கள் 5 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 65 ஓட்டங்கள‍ை பெற்றிருந்த வேளை ஆட்டமிழந்தார்.

இறுதியாக இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதன் மூலம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 307 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக பந்து வீச்சில் லுங்கி நிகிடி, ஜே.பி.டூமினி ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் முல்டர் மற்றும் மஹாராஜ், பெலக்கொய்யோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.