(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

பாராளுமன்ற விவாதத்திற்கு எதிரணியில் பெயர் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இருக்கவில்லை. ஆளும் கட்சியினர் இருந்து விவாதத்தை முடித்து விட்டு வீடமைப்பு மற்றும் நிர்மாண தொழில் அபிவிருத்தி சட்டத்தின் ஒழுங்குவிதிகள் உடன் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. வாய்மூல விடைக்கான வினா நேரம் முடிவடைந்தவுடன் வீடமைப்பு மற்றும் நிர்மாண தொழில் அபிவிருத்தி சட்டத்தின் ஒழுங்குவிதிகள்  மீதான விவாத்தை அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆரம்பித்து வைத்தார். 

இதன்போது குறித்த ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்திற்கு எதிரணியில் பெயர் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் சபையில் இருக்கவில்லை. இதனையடுத்து பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி எதிரணி பாராளுமன்ற உறுப்பனிர்களின் பெயர்களை அழைத்த போதும் எவரும் சபைக்குள் வரவில்லை. ஆளும் கட்சி சார்பாக முஜிபுர் ரஹ்மான் பேசுவதற்கு ஆயத்தமாக இருந்த போது எதிரணியில் பேசுவதற்கு எவரும் இல்லாத காரணத்தினால் விவாதத்தை முடிப்பதற்கு பிரதி சபாநாயகர் தீர்மானித்தார். 

இதன்படி வீடமைப்பு மற்றும் நிர்மாண தொழில் அபிவிருத்தி சட்டத்தின் ஒழுங்குவிதிகள் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்றம் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.