முசலியில் நிர்மாணிக்கப்பட்ட  மரிச்சுக்கட்டி பிரதான பெரிய பாலம் இன்று காலை மக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.

கடந்த 2016ஆம் ஆண்டு உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை விஷேட திட்டங்கள் முகாமைத்துவப் பிரிவும்  இணைந்து ஜப்பான் சர்வதேச கூட்டுத்தாபன முகவர் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பிலுள்ள பாரிய பாலங்கள் நிர்மாணிப்பதற்கான கருத்துத் திட்டம் ஒப்பந்தப் பிரிவு இரண்டின் கீழ்  முசலிப்பிரதேசத்தில் பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பமானது.

குறித்த நிலையில்  முசலி மரிச்சுக்கட்டி பிரதான பெரிய பாலம் நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகிய நிலையில் இன்றைய தினம்  சாதாரணமாக திறந்துவிடப்பட்டுள்ளது.