ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்­தானை வீழ்த்­திய பங்­க­ளாதேஷ் இறுதிப் போட்­டியில் விளை­யாடும் வாய்ப்பை உறு­திப்­ப­டுத்­திக்­கொண்­டது.

ஆசியக் கிண்ண இரு­ப­துக்கு 20 தொடரில் நேற்று நடை­பெற்ற 8ஆவது போட்­டியில் தொடரை நடத்தும் பங்­க­ளா­தேஷும் பாகிஸ்­தானும் மோதின. இந்தப் போட்­டியில் பங்­க­ளாதேஷ் அணி அபா­ர­மாக ஆடி 5 விக்­கெட்­டுக்­களால் பாகிஸ்­தானை வீழ்த்­தி­யது.

இந்தப் போட்­டியில் நாணய சுழற்­சியில் வெற்­றி­பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்­பெ­டுத்­தாடத் தீர்­மா­னித்­தது. பாகிஸ்தான் தொடக்க ஆட்­டக்­கா­ரர்கள் மன்சூர் மற்றும் சர்ஜில் கான் இரு­வரும் மீண்டும் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழந்து ஏமாற்­றினர். ஆனால் விக்கெட் காப்­பாளர் சர்­பிராஸ் அக­ம­துவும், சோயப் மாலிக்கும் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவில் இருந்து மீட்­டனர். மலிக் 41 ஓட்­டங்­களைப் பெற்று ஆட்­ட­மி­ழந்தார். சர்­பிராஸ் அக­மது அதி­ர­டி­யாக ஆடி 58 ஓட்­டங்­களைக் குவித்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்­கெட்­களை இழந்து 129 ஓட்­டங்­களைப் பெற்­றது.

130 ஓட்­டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்­குடன் கள­மி­றங்­கிய பங்­க­ளாதேஷ் அணி 5 பந்­துகள் 5 விக்­கெட்­டுக்கள் மீத­மி­ருக்க 131 ஓட்­டங்­களைப் பெற்று வெற்­றி­யீட்டி இறு­திப்­போட்­டிக்கு முன்­னே­றி­யது.

இதில் ஷர்கர் 48 ஓட்­டங்­க­ளையும் மொஹ­ம­துல்லா ஆட்­ட­மி­ழக்­காமல் 22 ஓட்­டங்­க­ளையும் விளாசி அணியை வெற்­றிப்­பா­தைக்கு அழைத்­துச்­சென்­றனர்.

இந்த வெற்­றி­யுடன் பங்­க­ளாதேஷ் அணி ஆசியக் கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்த்தாடுகிறது. இந்தப் போட்டி எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.