தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனுக்கு எதிராக யாழ்.  வடமராட்சியில்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள பரிசளிப்பு விழா ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம். ஏ. சுமந்திரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக  தெரிவிக்கிப்படுகின்றது.