(எம்.மனோசித்ரா)

போரிடும் தொழில்னுட்ப புரிந்துணர்வு தொடர்பாக ரஷ்யா இலங்கை ஆகிய நாடுகளுக்கான  செற்பாட்டுக் குழுவின் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளது.

2014 ஆம் ஆண்டில் ரஷ்யா மற்றும் இலங்கைக்கிடையில் கைசாத்திடப்பட்ட போரிடும் புரிந்துணர்வு தொடர்பான உடன்படிக்கைக்கு அமைய குறித்த புரிந்துணர்வு ஆவணம் அமைக்கப்படவுள்ளது. 

அதற்கமைய உத்தேச போரிடும் தொழில்னுட்ப புரிந்துணர்வு குறித்து ரஷ்யா - இலங்கை கூட்டு செயற்பாட்டு குழுவின் பொறுப்புக்கள் மற்றும் உடன்படிக்கையை உள்ளடக்கிய ஆவணம் கைசாத்திடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.