கிளிநொச்சி, கிராஞ்சி இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு இரண்டு தடவைகள் நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும், இதுவரை அகற்றப்படாமையினால் தமது தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராஞ்சி கடற்தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய கடற்பகுதிகளில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கைது செய்யப்பட்ட சுமார் 40 வரையான இந்திய இழுவைப்படகுகள் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக கடற்படையினரின் பாதுகாப்பில் கிளிநொச்சி கிராஞ்சி சிறிமுருகன் கடற்தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க எல்லைக்குட்பட்ட இலவங்குடா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் குறித்த கடற்பகுதியில் கடற்தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்ட 60 இற்கும் மேற்பட்ட கடற்தொழிலாளர்கள் தமது வாழவாதாரத் தொழில்களை செய்ய முடியாது போயுள்ளதாகவும் இவ்வாறு நிறுததி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளில் இருந்து வெளியேறுகின்ற எண்ணைக்கசிவுகளால் கரையோரக்கடல் பகுதிகள் மாசடைவதுடன் கடல் வாழ் உயிரினங்கள், கடற் தாவரங்கள் அழிவடைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு தமது வாழ்வாதாரத்தொழில்களை முன்னெடுக்கும் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை அகற்றி தமது தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க வழிவகை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற பூநகரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திலும், தொடர்ந்தும் யூன் மாதம் 12ஆம் திகதி நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்திலும் குறித்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் இவற்றை அகற்றித்தருவதாக தெரிவித்த போதும், இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகள் இதுவரை அகற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ள கடற்தொழிலாளர்கள் தமது வாழவாதாரத்தொழில்களை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவைப்படகுகளை அகற்றித்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM