"நல்லாட்சி அரசை ஆட்சிபீடமேற்றியதில் மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வகிபாகம் பெரிது"

Published By: Digital Desk 7

08 Aug, 2018 | 03:41 PM
image

நல்லாட்சி அரசை வெற்றிபெறச் செய்தவர்களில் மூன்றாவது சிறுபான்மைச் சமூகத்தின் பங்கு அளப்பரியதாக இருந்தது என்பதை உணராத நிலையில் நல்லாட்சி அரசு தற்போது நகர்வது கவலையளிப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தெரிவித்தார்

நல்லாட்சி அரசின் கலப்புத் தேர்தல் முறை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்பிக்கையற்று குழப்பங்களோடு இருந்த சிறுபான்மையினர் அந்தக் குழப்பகரமான அரசை மாற்றி நல்லாட்சி அரசை ஆட்சிபீடமேற்றினர்.

இதில் மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களின் வகிபாகம் பெரிதாக இருந்தது.

ஆனால், நல்லாட்சி அரசின் தற்போதைய போக்கு அந்த மூன்றாவது சிறுபான்மையினரான முஸ்லிம்களைத் தோற்கடிப்பதாக அமைந்திருக்கிறது.

நல்லாட்சி அரசு கலப்புத் தேர்தல் முறையை அமுல்படுத்துவதன் மூலம் நாட்டின் மூன்றாவது சிறுபான்மையான முஸ்லிம் சமூகத்தை அரசியல் பிரதிநிதித்துவம் அற்றவர்களாக்குவதோடு அவர்களது இன்னபிற அரசியல் உரிமைகளையும் இல்லாதொழிப்பதாகவே அமைந்து விடும்.

இதுவொரு ஜனநாயக மறுப்பாகவும் நல்லாட்சியின் கொள்கை விரோதச் செயற்பாடாகவும்  கருதிக் கொள்ளவும் வழியேற்பட்டுள்ளது.

கலப்புத் தேர்தல் முறையை மீண்டும் கொண்டு வருவது மாகாண சபையிலும், நாடாளுமன்றத் தேர்லில் முஸ்லிம் சமூக பிரதிநிதித்துவத்தை மிக மோசமாகக் குறைக்கக் கூடிய சாத்தியமுள்ளது.

மேலும், கலப்புத் தேர்தல் முறையை முதன் முதலாக கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது அமுல்படுத்திப் பார்த்த அனுபவத்தின் மூலம் அது இந்த பல்லின சமூக நாட்டுக்கு நடைமுறையில்  பொருந்தாது என்பதைக் கண்டுள்ளது இந்த நல்லாட்சி அரசு. கலப்புத் தேர்தல் முறையால் எந்தவொரு உள்ளுராட்சி மன்றமும் ஸ்திரமாக இல்லை என்பதைக் கண்டுணர்ந்து வருகின்றோம். அங்கு நிர்வாகம் சுமுகமாக இடம்பெறவில்லை.

ஆகவே இந்த கலப்பு முறைத் தேர்தல் மாகாண சபைகளுக்கும் நாடாளுமன்றத்திற்கும் அமுல்படுத்தப்படுமாக இருந்தால் இதே மாதிரியான தொங்கு இழுபறி நிலையே நிருவாகத்தில் ஏற்படும். அதனால் மக்கள் நம்பிக்கை இழப்பார்கள்.

பழைய தேர்தல் முறை மாத்திரமே சிறுபான்மைச் சமூகங்கள் மற்றும் சிறு கட்சிகளின்  ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தக் கூடியது.

இந்த முழு நாடும் நம்பிக்கையை இழப்பதற்கு முன்பதாக நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை மீண்டும் கொண்டுவரக் கூடியதாக நல்லாட்சி நல்ல அரசியல் முடிவுகளை எடுக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ராமண்ய பீடத்தின் மகா நாயக்க தேரரை...

2024-10-05 17:32:49
news-image

இலங்கை போன்ற அண்டை நாடுகள் இந்தியாவுக்கு...

2024-10-05 17:24:31
news-image

அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரரை சந்தித்து...

2024-10-05 17:21:24
news-image

14 வயது சிறுமிகள் இருவர் பாலியல்...

2024-10-05 17:12:37
news-image

வெலிகந்தையில் மாடுகள் திருட்டு ; சந்தேக...

2024-10-05 16:36:58
news-image

பெண் வேட்பாளர்களை அடையாளம் காணுவதில் கடினமாக...

2024-10-05 16:35:02
news-image

எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்படட...

2024-10-05 16:37:16
news-image

புத்தளம் - சிலாபம் வீதியில் விபத்து...

2024-10-05 16:26:30
news-image

குச்சவெளியில் மக்களின் விவசாய நிலங்களை தொல்பொருள்...

2024-10-05 17:29:49
news-image

சிறையிலுள்ள கணவனுக்கு தேங்காய் சம்பலில் போதைப்பொருளை...

2024-10-05 16:00:33
news-image

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கூட்டணியாக கேஸ்...

2024-10-05 15:37:37
news-image

பியூமி ஹன்சமாலியின் சொகுசு வாகனம் தொடர்பில்...

2024-10-05 16:24:12