மறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் தி.மு.கவின் தலைவர் கருணாநிதியின் உடலுக்கு இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலர் இன்று நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில் இலங்கை அரசின் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் இராதாகிருஷ்ணன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர், திரைத்துறையினர் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் இலங்கையிலிருந்து சென்ற அமைச்சர்களான மனோ கணேசன், இராதாகிருஷ்ணன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.திலகராஜ், வடிவேல் சுரேஷ் ஆகியோர் நேரில் சென்று கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்,
அத்தோடு இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க அனுப்பிய இரங்கல் செய்தியையும் கருணாநிதியின் மகளான கனிமொழியிடம் வழங்கி தங்களது அனுதாபங்களை தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM