எம்.எம்.மின்ஹாஜ்

கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பது குறித்தும் மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புற துறைமுகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் ஆராயும் நோக்குடன் சீன சென்றுள்ள அமைச்சர்களான மலிக் சமரவிக்கிரம மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் அந்நாட்டு அரசியல் பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்படி சீன சென்றுள்ள அமைச்சர்கள் இருவரும் நாளை மறுதினம் நாடு திரும்பவுள்ளனர். இதன்பிற்பாடு ஏப்ரல் மாதமளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சீனா சென்று பல தரப்பட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவினால் உதவியுடன் இலங்கையில் நிர்மாணக்கப்பட்டுள்ள மத்தள விமான நிலையம் மற்றும் மாகம்புற துறைமுகம் என்பன எந்தவொரு பயனுமின்றி இயங்கி வருகின்றது. இத்தகைய நிலையில் குறித்த அபிவிருத்தி திட்டங்களை மேலோங்க செய்வதற்கான நகர்வு குறித்து அரசாங்கம் அதிகளவில் அவதானம் செலுத்த தொடங்கியுள்ளது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போது சீன அரசாங்கத்துடன் கைச்சாத்திடப்பட்ட கொழும்பு துறைமுக நகர் திட்டத்தை மீளவும் ஆரம்பிப்பது தொடர்பிலும் அரசாங்கத்தின் அவதானம் திரும்புயுள்ளது. எனினும் துறைமுக நகர் திட்ட ஒப்பந்ததில் நாட்டிற்கு பாதகமான சில அம்சங்கள் காணப்படுகின்ற நிலையில் , திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தத்தின் ஊடாக குறித்த அபிவிருத்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்பிரகாரம் சீனா அரசாங்கத்துடான நட்புறவு தொடர்பில் கலந்துரையாடும் நோக்குடன் சர்வதேச வர்த்தக மற்றும் மூலோபாய அபிவிருத்தி அமைச்சர் மலிக் சமரவிக்கிரம மற்றும் சட்டம் ,ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகிய இருவரும் நேற்று சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டனர்.
இதன்போது அமைச்சர்கள் இருவரும் கொழும்பு துறைமுக நகர் திட்டம், மத்தள விமான நிலையம் , மாகம்புற துறைமுகம் அபிவிருத்தி திட்டம் தொடர்பில் சீனாவின் சீ.சீ.சீ நிறுவனத்துடனும், அந்நாட்டு அரசியல் பிரமுகர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.
இதனை தவிர பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏப்ரல் மாத விஜயம் தொடர்பிலும் பேசவுள்ளனர். இதனையடுத்து பிரதமரின் விஜயத்தின் போது பல தரப்பட்ட ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என்பது குறிப்பிடதக்கது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM