காலஞ்சென்ற ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் அசங்க தொடங்வலவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி நேற்று பிற்பகல் தனது இறுதி அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டிருந்த கண்டி ரிவர்டேல் மாவத்தையில் உள்ள இல்லத்திற்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், அன்னாரது குடும்ப உறுப்பினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். 

மரணிக்கும்போது திரு.அசங்க தொடங்வல ஜனாதிபதியின் கீழ் உள்ள அமைச்சுக்களின்  இணைப்புச் செயலாளராக கடமையாற்றினார்.

கண்டி நகர சபையின் முன்னால் பிரதி நகர பிதாவாக கண்டி நகரின் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்புகளை செய்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.