95 போலி கடவுச்சீட்டுக்களுடன் ஒருவர் கைது 

By Vishnu

08 Aug, 2018 | 12:41 PM
image

(எம்.மனோசித்ரா)

தலங்கம பகுதியில் சட்டவிரோதமான முறையில் போலி கடவுச்சீட்டுக்களை தயாரித்த சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திட்டமிட்ட குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கிணங்க குறித்த பகுதியை சோதனையிட்ட போது சந்தேக நபரை கைதுசெய்த பொலிஸார், அவரிடமிருந்து 95 போலி கடவுச்சீட்டுக்களையும், மடிக் கணணி மற்றும் ஸ்கேன் இயந்திரம் போன்வற்றையும் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட 61 வயதுடைய நபர் தலங்கம பகுதியைச் சேர்ந்தவர் எனவும் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right