இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு (2.30) ஆட்டமாக கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றியீட்டி தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

இந் நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் அபாரமாக தனது திறமையினை வெளிப்படுத்தி தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்க‍ை அணி ஒருநாள் தொடரை அப்படியே தலைகீழாக மாற்றிப் போட்டாது. 

ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்று போட்டிகளில் மோசமாக விளையாடி படுதோல்வியடைந்துள்ள இலங்கை அணி இன்று நடைபெறவுள்ள நான்காவது போட்டியில் சரி வெற்றியீட்டி இலங்கை ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கடந்த போட்டியின் போது தென்னாபிரிக்க அணியின் தலைவர் டூப்பிளஸ்ஸிக்கு வலது தோள் பகுதியில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக அவர் தொடரிலிருந்து நீங்கியதனால் இன்றைய தினம் தென்னாபிரிக்க அணித் தலைவராக டீகொக் செயற்படுவார்.