18 ஆவது ஆசிய விளை­யாட்டு விழா எதிர்­வரும் 18 ஆம் திகதி இந்­தோ­னே­ஷி­யாவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இம்­முறை இலங்­கையும் மிகப்­பெ­ரிய அணியை இத் தொட­ருக்­காக அனுப்­பி­வைக்­க­வுள்­ளது.

இந்த விளை­யாட்டுத் தொடரை இந்­தி­யாதான் முதன்­மு­த­லாக 1951ஆம் ஆண்டு நடத்­தி­யது. 4 ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் இந்த விளை­யாட்டுப் போட்­டித் தொடர் ஆசி­யாவிலுள்ள பல்­வேறு நக­ரங்­களில் நடத்­தப்­பட்டு வரு­கின்றது. 

தற்­போது 18- ஆவது ஆசிய விளை­யாட்டுப் போட்டி இந்­தோ­னே­ஷி­யாவின் தலை­நகர் ஜகார்த்­தா­விலும் தெற்கு சுமாத்ரா தலைநகர் பாலேம்­பங்­கிலும் நடை­பெ­று­கி­றது.

ஆசிய விளை­யாட்டுப் போட்டி இரு நக­ரங்­களில் நடை­பெ­று­வது இதுவே முதன்­முறையாகும். 

தொடக்க விழா மற்றும் நிறைவு விழா ஆகி­யவை ஜகார்த்­தாவிலுள்ள கலேரா புங் கர்னோ மைதா­னத்தில் நடை­பெ­று­கி­றது. 

கடந்த 2012 ஆம் ஆண்டு போட்­டியை நடத்தும் நக­ரத்தைத் தேர்வு செய்­வ­தற்­காக நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில் வியட்நாம் நக­ரான ஹனோய் தேர்வு செய்­யப்­பட்­டது. ஆனால் நிதி நெருக்­கடி கார­ண­மாக அந்­ந­கரம் போட்­டியை நடத்­து­வதிலிருந்து பின்­வாங்கிக் கொண்­டது. 

இதனைத் தொடர்ந்து போட்­டியை நடத்தும் உரி­மையை இந்­தோ­னே­ஷி­யா­வுக்கு வழங்­கி­யது ஆசிய ஒலிம்பிக் கூட்­ட­மைப்பு.

முறைப்­படி இப் போட்டியை 2019 ஆம் ஆண்டு தொடக்­கத்­தில்தான் இந்­தோ­னே­ஷியா நடத்தத் திட்­ட­மிட்­டி­ருந்­தது. 

ஆனால் பொதுத்­தேர்தல் கார­ண­மாக இந்த ஆண்டே நடத்­தப்­ப­டு­கி­ன்றது.

போட்­டிக்­கான அதி­கா­ரபூர்வ சின்னங்களாக பிகின் பிகின் பறவை, அட்டுங் மான், காண்­டா­மி­ருகம் ஆகி­யவை ஏற்­கெ­னவே அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. 

இப்போட்­டிக்­கான ஜோதி ஓட்டம் கடந்த மாதம் 16ஆம் திகதி டெல்­லியில் தொடங்­கி­யது. இந்த ஜோதி ஓட்­ட­மா­னது ஆசியக் கண்­டத்தின் 54 நக­ரங்கள், இந்­தோ­னே­ஷி­யாவின் 18 மாகா­ணங்கள் வழி­யாக எதிர்­வரும் 17ஆ-ம் திகதி ஜகார்த்­தாவை சென்­ற­டை­கின்­றது.

ஆசிய ஒலிம்பிக் கூட்­ட­மைப்பில் உறுப்பினர்களாக உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் மற்றும் நிர்வாகிகள் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்கின்றனர்.