முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று ஆறாவாது நாளான கடற்தொழிலாளர்களின் போராட்டத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செயலாளர் செ.கயேந்திரன் மற்றும் ஜக்கிய நாடுகள் சபையின் மேற்கு ஆபிரிக்காவிற்கான வதிவிடப்பிரதிநிதி வி.நவநீதன் ஆகியோர் கலந்துரையாடியுள்ளார்கள். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

தமிழ்தேசத்தின் கடற்தொழிலாளர்களின் பிரச்சினை என்பது வாழ்வுக்கான  போராட்டமாக இன்று காணப்படுகின்றது யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு,திருகோணமலையாக இருக்கலாம் அனைத்து பிரச்சனையும் கடற்தொழிலாளர்களை குறிவைத்து திட்டமிட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்ற சதி நடவடிக்கையாகத்தான் பார்கின்றோம் 

போர் நடைபெற்ற காலத்தில் கஷ்டப்பட்ட தொழிலாளர்கள் இன்று தடைகள் விதிக்கப்பட்ட தொழில் என்றால் கடற்தொழிலாகத்தான் காணப்பட்டது.

மிகவும் பொருளாதாரரீதியாக பாதிக்கப்பட்ட மக்களின் தொழிலை போருக்கு பின்னர் தென்னிலங்கையில் இருக்கக்கூடிய பொருளாதாரரீதியில் பலமாக உள்ள மக்களை வைத்து பொருளாதாரரீதியில் பின்னுக்கு உள்ள தமிழ்மக்களின் தொழிலுடன் போட்டியிட வைத்து தடைசெய்யப்பட்ட தொழில் முறையினையினையும் பயன்படுத்தி உண்மையில் பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்களின் கழுத்தினை எல்லாப்பகத்திலும் நெருக்கும் நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பிரதேசத்தில் குறிப்பாக நந்திக்கடல் போன்ற பகுதி இரண்டாயிரத்திற்கும் அதிகமாகன பகுதி சட்டரீதியாக அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

குறித்த நிலையில் தமிழ்தேசிய மக்கள் முன்னணி இந்த விடயங்களை பல ஆண்டுகளாக சொல்லி வருகின்றோம்.

 தமிழர்கள் மீதான இவ்வாறான நடவடிக்கை இந்த அரசு மாட்டுமல்ல ராஜபக்ஷவின் அரசும் மேற்கொண்டது.

 இது ஒட்டுமொத்தமாக இலங்கை அரசு திட்டமிட்டு கடற்கரை முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும்.

 தமிழ்மக்களுக்கு கடற்கரையில் இடம் இல்லாமல் போகவேண்டும் என்று தமிழ் மக்கள் தொழில் செய்ய முடியாத நெருக்கடிகளை கொடுத்து இந்த மக்கள் பிரதேசங்களை விட்டு வெளியேறும் நிலைமைக்கு தள்ளப்படவேண்டும் இல்லாது வெளிநாட்டிற்கு செல்லும் அளவிற்கு நெருக்கடிகளை அதிகரிக்கும் நோக்குடன் இந்த அரசு செயற்படுகின்றது.

எங்களை பொறுத்தமட்டில் இது ஒரு அரசியல் பிரச்சினை கடற்தொழிலாளர்களின் கழுத்தில் கைவைப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த தமிழ்தேசத்தின் பொருளாதாரத்தில் கைவைப்பதற்கு சமமாகும் தமிழர்களின் பொருளாதாரம் கடற்தொழிலும் விவசாயமுமாக காணப்படுகின்றது.

கடற்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணியினால் செய்யக்கூடிய வகையில் அந்தந்த இடங்களில் இருந்து பலம் சேர்ப்போம் ஏனைய மக்களும் கடற்தொழிலாளர்களின் பிரச்சினையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.