வடக்கின், யாழ். பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­வுக்குட்­பட்ட பகு­தி­களில் இடம்­பெற்ற வாள் வெட்டு சம்­ப­வங்­க­ளுடன் தொடர்­பு­டைய,  குழுவைச் சேர்ந்த 27 பேரை கடந்த இரு வாரங்­க­ளுக்குள் பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

அத்­துடன்  அவர்­க­ளி­ட­மி­ருந்து குறித்த தாக்­கு­தல்­களை  நடாத்த பயன்­ப­டுத்­தப் பட்­ட­தாக சந்­தே­கிக்­க­ப்படும் 7 மோட்டார் சைக்­கிள்­க­ளையும், நான்கு வாள்­ க­ளையும் ஒரு கோட­ரி­யையும்  கைப்­ பற்­றி­யுள்­ள­தாக வடமாகா­ணத்தின் உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கேச­ரிக்கு தெரி­வித்தார்.

யாழில் இருந்து ஆவா குழுவை முழு­மை­யாக துடைத்­தெ­றியும் நட­வ­டிக்கை தொடர்­வ­தா­கவும்  ஆவா குழு­வி­னரைக் கைது செய்ய பொலிஸ் விசேட அதி­ரடிப் படை­யி­னரை உள்­ள­டக்­கிய 10 மோட்டார் சைக்கிள் படை­யணி குழுக்­க­ளையும் 30 மேல­திக உளவுத்துறை அதி­கா­ரி­க­ளையும் யாழில் கட­மையில் ஈடு­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும் அந்த அதி­காரி கூறினார்.

யாழ்., மானிப்பாய், சுன்­னாகம், கோப்பாய் ஆகிய பொலிஸ் பிரி­வு­களில் இடம்­பெற்ற தாக்­கு­தல்கள் தொடர்­பி­லேயே இந்த 27 பேரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் 18 வய­துக்கும் 25 வய­துக்கும் இடைப்­பட்­ட­வர்கள் எனவும் அவர் மேலும் கூறினார்.  

 ஆவா குழுவிலிருந்து விலகிச் செல்­ப­வர்கள், அக்­குழு தொடர்பில் ரக­சி­யங்­களை வெளியே சொல்­லலாம் எனும் அச்­சத்தில் முன்னாள் உறுப்­பி­னர்கள், அவர்­க­ளது உற­வி­னர்கள் வீடுகள் இலக்­கு­வைக்­கப்­ப­டு­வ­தாக கண்­ட­றிந்­துள்ள பொலிஸார், அந்த வன்­மு­றை­களில் ஈடு­ப­டுவோர் தொடர்­பிலும் தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டுள்­ளனர். 

அத்­துடன் பாட­சாலை மாண­வர்கள், பாட­சா­லையை விட்டு வில­கி­ய­வர்­களை தமது குழுக்­களில் இணைத்­துக்­கொள்ள ஆவா குழு­வினர் முன்­னெ­டுக்கும் பிர­யத்­தனங்கள் தொடர்­பிலும் தக­வல்கள் வெளிப்ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில் பொலிஸ் விசா­ர­ணைகள் தீவி­ர­ப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

24 மணி நேர நட­வ­டிக்­கை­யாக இந்த விசேட நட­வ­டிக்­கைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள நிலையில் வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்

மா அதிபர் ரொஷான் பெர்னாண் டோவின் கீழ், யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் வருண ஜய சுந்தரவின் வழிநடத்தலில் நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.