வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூனாமடு பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து 1,760 துப்பாக்கி ரவைகள் மீட்கப்கட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, மூனாமடு பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில்  உள்ள தனியாருக்கு சொந்தமான காணியினை துப்புரவு செய்த போதே குறித்த துப்பாக்கி ரவைகள் மண்ணியல் புதையுண்ட நிலையில் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. 

இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரும், மூனாமடு இராணுவத்தினரும் குறித்த இடத்திற்கு சென்று துப்பாக்கி ரவைகளை மீட்டனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட துப்பாக்கி ரவைகள் ரி 56 துப்பாக்கியின் உடையது என கூறிய பொலிஸார் அவை முன்னர் விடுதலைப் புலிகளால் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.