( நா. தினுஷா)

பொல்காவெல  புகையிரத விபத்து தொடர்பில் துரிதகரமான விசாரணைகளை மேற்கொள்ள போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வாவின் பணிப்புரையின் கீழ் மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

விபத்திற்கு காரணமான  புகையிரத சாரதி, உதவி சாரதி, கட்டுப்பாட்டாளர், மற்றும் உதவி கட்டுப்பாட்டாளரகள் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புகையிரத பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்தார்.

பொல்காவெல பிரதேசத்தில் நேற்று  இடம்பெற்ற புகையிரத விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு காயமடைந்தவர்கள் ரம்புக்கன, கேகாலை, பொல்கஹாவலை மற்றும் குருணாகலை ஆகிய வைத்தியசலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் சிலர் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.