(க.கிஷாந்தன்)

நுவரெலியாவில் கடந்த 23 ஆம் திகதி இடம்பெற்ற பஸ் விபத்து ஒன்றில் பலியான நுவரெலியா ஹாவா எலிய பரிசுத்த திரித்துவ கல்லூரி மாணவன் தொடர்பான வழக்கு விசாரணை இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் சந்தேக நபராக பஸ் சாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

சந்தேக நபரை நீதிமன்ற நீதவான் ஐ.ஆர்.டீ இந்திக்க முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபருக்கு ஒன்றரை இலட்சம் ரூபா சரீர பிணையும், பத்தாயிரம் ரூபா காசு பிணையிலும் செல்ல நீதிபதி உத்திரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலும் ஒரு வழக்கு விசாரணை இம்மாதம் 20ஆம் திகதி நடைபெறும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.