(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியல் அமைப்பிற்கு முரணானது என சாநாயகர் கருஜயசூரிய சபையில் தெரிவித்துள்ளார். 

பாராளுமன்றத்தில் இன்று சபாநாயகர் அறிவிப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியல் அமைப்பிற்கு முரணானது. குறித்த விதிமுறை  நிறைவேற்றப்படவேண்டும் என்றால்  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு அல்லது சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆகவே உயர் நீதின்மற தீர்ப்பின் பிரகாரம் சட்ட மூலத்தில்  திருத்தங்கள் செய்து அரசியல் அமைப்பிற்கு உட்பட்டதாக மாற்றியமைத்தால் அதனை நிறைவேற்ற முடியும். அதேபோல் சட்ட மூலத்தில் ஏனைய விதிமுறைகள் சட்டமூலத்துக்கு  முரணானது அல்ல எனவும் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.